இலவச கணணி கற்கை நெறி
வாடியடி பொது நூலகம் மற்றும் ஜெயபுரம் பொது நூலகத்தில் இலவச கணணி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலரது கோரிக்கைகளினையடுத்து பூநகரி பிரதேசபை தனது பொது நூலகங்களில் கணணி கற்கைகளை இலவசமாக மாணவர்களிற்கு வழங்க தொடங்கியுள்ளது. சபையின் துறைசார்ந்த உத்தியோத்தர்கள் தமது கடமை நேரத்திற்கு மேலதிகமாக கணணி கையேடுகள் சகிதம் கற்கைகளை ஆரம்பித்துள்ளனர்.