ryan-hafey-PdJjT-zYg_E-unsplash

பிரதேச சபைகளிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் மக்களின் அச்சத்தை தவிர்த்தலும் உள்ளடக்கப்படும். குறிப்பிட்டதொரு மரமொன்றின் அல்லது அதன் பகுதியினால் மர உரிமையாளர் அல்லாத வெளி நபரொருவருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்தில் குறித்த மரத்தை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

ஏதேனும் சந்தர்ப்பத்தில் அம்மரத்தை வெட்டி அகற்றுவதற்கான கட்டளையை பிறப்பிக்க முன்னர் அம்மரம் 1956 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க மரங்கள் வெட்டுவதை கட்டுப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளில் வெட்டி அகற்ற தடை செய்யப்பட்டுள்ள மரமா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சட்டத் தேவைப்பாடாகும்.

சேவை வழங்கும் அலுவலர்கள் 

  1. பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர்
  2. உப அலுவலக பொறுப்பதிகாரிகள்
  3. தொழில்நுட்ப உத்தியோகத்தர்
மேலதிக விளக்கங்களுக்கு இங்கே சொடுக்கவும்