
பூநகரி பிரதேசசபை தனது பயணத்தின் மற்றுமொரு பரிணாமமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே தனது அன்றாட பணிகளில் பிரதான பணியாக குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துவந்திருந்த சபை தற்போது சுமார் இரண்டு மில்லியன் பெறுமதியிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை இரணைமாதா நகர் உப அலுவலகத்தில் பொருத்தியுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மூலமாக பெறப்பட்ட குடிநீரினை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிற்கு சலுகை கட்டணத்தில் வழங்கவும் பூநகரி பிரதேசசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பூநகரி பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 28ம் திகதி (28;.02;.2024) ஆரம்பமாகி 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. உற்சவ காலத்தில் ஆயிரக்கணக்கில் யாத்திரீகர்கள் பங்கெடுப்பர் என்பதால் அவர்களிற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி வழங்குவது பூநகரி பிரதேசசபையின் கடமையாகின்றது.தரை வழி தொடர்புகளற்ற நிலையில் கடல் வழி விநியோகமாக குடிநீர் பௌசர்கள் இழுவை இயந்திரங்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக எடுத்து செல்லப்படுவது வழமையாகும்.தமது அன்றாட பணிகள் மத்தியில் பாலை தீவு உற்சவத்திற்கு தயாராகின்றனர் பூநகரி பிரதேசசபை உத்தியோகத்தர்கள்.

இலங்கையின் இயற்கை வளம் கொஞ்சும் பிரதேசங்களில் பூநகரி பிரதேசமும் ஒன்றாகும். நீலக்கடல்களும் பச்சை வயல்களும் பரந்து விரிந்து கிடக்கின்ற பூநகரி அவ்வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதில் அதிசயமொன்றுமில்லை. நடப்பாண்டில் பாரிய வளர்ச்சியை சுற்றுலா துறையிலும் சாதிக்குமென பூநகரி மண் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றது. நகரமயமாக்கல் மத்தியில் அழகு கொஞ்சும் கௌதாரி முனையினை முன்னிறுத்தி சுற்றுலா திட்டங்கள் வகுக்கப்படுகின்றது.
முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டுத்திட்டத்தின் பின் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவி இருந்தது. தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்துவந்த நிலையில் நேற்று பாரிய அளவில் தீ பரவ ஆரம்பித்தது. சம்பவம் தொடர்பில் பூநகரிப் பிரதேச சபையின் செயலாளர் இரத்தினம் தயாபரன் நேரில் சென்று கண்காணித்ததுடன் மாவட்ட இடர் முகாமைத்துவப்பிரிவுக்கும் தகவல் வழங்கினார். தொடர்ந்து கரைச்சிப் பிரதேச சபையின் தீ அணைப்புப் பிரிவின் உதவியுடன் தீப்பரவலைக்க கட்டுப்படுத்த முயற்சித்தபோதிலும் காட்டுப்பகுதிக்குச் செல்லும் பாதை இல்லாத நிலையில் எமது மோட்டார் கிறைண்டர் மூலம் பாதை வெட்டப்பட்டு அப்பகுதி மக்களுடன் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்டதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பூநகரி மண்ணின் பழமையும் தொன்மையும் பாதுகாக்கும் நோக்கிலும் வரலாற்று பதிவுகளை நிலைநாட்டு நோக்கிலும் பல்லவராயன் கட்டு சந்தியில் பூநகரி மண்ணை ஆண்ட பல்லவ மன்னனின் சிலையினை நமது சபை நிதி மூலம் கடந்த 02.06.2023 அன்று கௌரவ அமைச்சர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் பூநகரி பிரதேச கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொதியும் சபை எல்லை குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது

