LDSP PT2 நிதியீட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கான ஊட்டச்சத்து துணை உணவினை வழங்கும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தற்போதுள்ள நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளில் எதிர்கால சமுதாயத்தினரின் போசாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் LDSP PT2 திட்டத்தின் ஊடாக சபையின் எல்லை குட்பட்ட 54 முன்பள்ளிகளுக்கு 60 நாள் கொண்ட இத்திட்டம் கடந்த 02.05.2023 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினை சபையின் சன சமூக நிலையங்கள் ஊடாகவும் முன்பள்ளி பெற்றோர்களின் ஊடாகவும் வட்டார உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது