வேறு என்ன வேண்டும் எங்களிற்கு?

பூநகரி பிரதேசசபை தனது ஆளுகைக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய வேரவில் கிராமத்தில் மூன்றாவது கணணி மையம் மற்றும் பொது நூலகத்தை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது.
சுமார் 50வருடங்களின் பின்னராக நூலகமொன்றையும் கணணி வசதிகளையும் வேரவில் கிராமம் கண்டிருப்பதாக மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வேரவில் மற்றும் அதனையண்டிய வலைப்பாடு,கிராஞ்சி,பொன்னாவெளி மற்றும் பாலாவி என ஜந்து கிராமங்களை மையப்படுத்தி பொது நூலகம் மற்றும் கணணி கூடம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசசபை தனது ஆளுகைக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய வேரவில் கிராமத்தில் மூன்றாவது கணணி மையம் மற்றும் பொது நூலகத்தை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது.
எளிமையான திறப்புவிழா நிகழ்வில் மாணவர்கள்,மதத்தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக வாடியடி மற்றும் ஜெயபுரத்தில் இரு கணணி மயப்படுத்தப்பட்ட நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவதாக வேரவில் பொது நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமது உயர்தர வகுப்பு கல்விக்காக முழங்காவில்,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியாவென அலைந்து திரிந்த ஜந்து கிராம மக்களும் தமது சொந்த மண்ணிலேயே கல்வியை தொடர வழிவகுத்திருப்பதாக கல்விச்சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் பல்லவராயன்கட்டு சந்தியிலிருந்து மேற்காக இக்கிராமங்கள் அமைந்துள்ளன.

இணையதள அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள்  கடந்த 01.03.2024 அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால் பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன,  உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களுக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் , தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் தேவைகளுக்கு போதுமான நிதியை உள்ளூரில் காணப்படும் வளங்களை கொண்டு தங்களுக்கான வருமானங்களை உள்ளூராட்சி நிறுவனங்கள் திரட்டிக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கௌரவ ஆளுநர் கூறினார்.  இதேவேளை மக்களுடன் சிநேகமான முறையில் தங்களின் சேவைகளை வழங்க வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

 

வேரவில் நூலகமும் திறக்கப்படுகின்றது!

பூநகரி பிரதேசசபை தனது பயணத்தில் மற்றுமொரு மைல் கல்லினை எட்டியுள்ளது.எவராலும் கண்டுகொள்ளப்படாதிருந்த வேரவில் உள்ளிட்ட ஜந்து கிராம மக்களிற்கான பொது நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

“முழங்காவிலிலும் மூட்டம்”

ஒருபுறம் பகலில் சுட்டெரிக்கு வெயில் வாட்டி வதக்கினாலும் அதிகாலை வேளை பனி மூட்டம் முழங்காவிலை மூடி மறைக்கின்றது.நல்லதொரு புகைப்பட கலைஞர் அவர்களது புகைப்படங்கள் சில :

Thanks:https://www.facebook.com/thiyaku.vasi

 

பாலைதீவு உற்சவம்:பக்தி பூர்வமாக முன்னெடுப்பு!

பூநகரி பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் வருடாந்த உற்சவம் கடந்த 28ம் திகதி ஆரம்பமாகி 03ம் திகதி (03;.03.2024) ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.
திருப்பலி- பூஜை மற்றும் ஆராதனைகளில் வடக்கின் அனைத்து மாவட்டங்ளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் யாத்திரீகர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அவர்களிற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்தி வழங்குவது பூநகரி பிரதேசசபையின் இம்முறையும் தனது அர்ப்பணிப்பு மிக்க கடமையினை ஆற்றியுள்ளது.
தரை வழி தொடர்புகளற்ற நிலையில் கடல் வழி விநியோகமாக குடிநீர் பௌசர்கள் இழுவை இயந்திரங்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக எடுத்து செல்லப்பட்டதுடன் சுமார் ஆறு நாட்களாக பணியாளர்கள் தங்கியிருந்து சேவைகளை ஆற்றியிருந்தனர்.