பூநகரி பிரதேசசபை தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இரணைதீவு உப அலுவலகத்திற்குட்பட்ட முழங்காவில் வட்டாரம் மற்றும் வாடியடி உப அலுவலகத்;திற்குட்பட்ட ஞானிமடம் வட்டாரம் என்பவையே அபிவிருத்தியடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கடந்த ஜீன் 14ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பிலேயே பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.