உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு எமது பிரதேச சபையால் துப்பரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் முதற்கட்டமாக யூன் 03 ம் திகதி எமது பிரதேச சபை தலைமை அலுவலக, உப அலுவலக வளாகங்கள் சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களால் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் துப்பரவுப் பணியில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், சனசமூக நிலையத்தினர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்வாக யூன் 04 ம் திகதி பொதுச் சந்தைகளிலும் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த சுற்றுலா மையங்களிலும் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் அகற்றுதல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வாக யூன் 05 ம் திகதி முழங்காவில் பொதுச் சந்தை வளாகத்திலும்; பல்லவராயன்கட்டு உப அலுவலக வளாகத்திலும் மரங்கள் நடப்பட்டன.