உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் ஊடாக அந்த எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், ஆரோக்கியம், வசதிகள் மற்றும் நலனோம்பல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டரீதியான அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படுகின்ற நிர்மாண அனுமதிப்பத்திரத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்கும்போது ஆரோக்கியம், சுகாதாரம், மற்றும் நலனோம்பல் வசதிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற முறையில் பிரதேச சபையின் உரிய முறையான அனுமதியினைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அமைப்பது இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிதேசசபை கட்டளை சட்டத்தின் உப பிரிவு 47 இன் கீழ் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்

கட்டட / நிர்மாண அனுமதியினை பெற்று கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

.விண்ணப்பதாரியின் கோரிக்கை கடிதம் & பூர்த்தி செய்யப்படட விண்ணப்ப படிவம் ( விண்ணப்ப படிவத்தினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் வேண்டும் அல்லது முன் அலுலக கருமபீடத்தில் பெற்று கொள்ள வேண்டும் )

காணி உறுதி பிரதி (உண்மை பிரதி உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

காணியின் வரலாற்றுதாள் ( தோம்பு 30 வருடங்கள்)
உண்மை பிரதி உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பித்தல் வேண்டும். தோம்பு தொலைந்ததிருப்பின் தொலைந்தமை தொடர்பாக காணி பதிவாளரால் வழங்கப்பட்ட கடிதம்.

சபையினால் அங்கீகரிகப்பட்ட பட வரைஞர் ஒருவரால் வரையப்படட கட்டட வரைபடம்.

ஆதன நில அளவை படபிரதி ( உண்மை பிரதி உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை பிரதி.

ஆதன உரிமையாளர் இல்லாது வேறு நபரினால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுமாயின் அற்றோனிக் தத்துவம் பிரதி


ஆதன விஸ்தீரணத்தின் அளவுகளில் வேறுபாடுகள் (சட்ட தரணிகள் மூலம் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்.


வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி ( தேவைப்படின்)


வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதி (தேவைப்படின்)


நிலம் அரசுக்கு சொந்தமாக இருந்தால் பிரதேச செயலகத்தில் இருந்து குத்தகை ஒப்பந்தம் பெறப்பட வேண்டும்.


தனியார் அல்லாத கட்டிடத்தில் கட் டட அனுமதி வழங்கப்பட வேண்டுமானால் வேண்டுமானால் பிரதேச செயலகத்தின் அனுமதி.

உள்ளூராட்சி மன்றத்தில் கட்டட அனுமதியை பெற்று கொள்ளும் செயன்முறை

முன்அலுவலகத்தில் அல்லது இணையத்தளத்தில் கட்டிட விண்ணப்ப படிவத்தை பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான உதவி ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் வருமானப்பரிசோதகர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடமிருந்து கள ஆய்வு அறிக்கைகள் பெறப்படுதல், தேவை ஏற்படின் தொடர்புபட்ட திணைக்கள அனுமதியினை பெற்றுக்கொள்ளல்.

திட்டமிடல் குழுக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு பொருத்தமான திணைக்கள மற்றும் உள்ளுராட்சி அலுவலர்களின் பங்குபற்றுலுடன் கட்டிட விண்ணப்படிவம் பரீசிலிக்கப்பட்டு ஏறறுக்கொள்ளப்படுதல் அல்லது மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுதல்.

கட்டிட அனுமதிப்பத்திரத்தினை வழங்குதல்.

விண்ணப்பப்பத்திர கட்டணம் 500.00

செயன்முறைக் கட்டணம் : விஸ்தீரம், கட்டிடத்தின் தன்மையின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.