தேசிய வாசிப்பு மாதம் 2024 இரணைதீவு பொது நூலகம்

இரணைதீவு பொது நூலகத்தினால் 2024 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத “உலகை வென்றவர்கள் மக்களே” என்னும் தொனிப்பொருளுக்கமைய பரிசளிப்பு நிகழ்வும், முத்தொழி இதழ் 04 சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 25.10.2024 அன்று பொதுநூலகத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஆதார வைத்தியசாலை முழங்காவில் வைத்திய அத்தியட்சகர் Dr O.P Benjamin கலந்து கொண்டு சிறப்பித்தார். முத்தொழி சஞ்சிகை சபையின் செயலாளர், பிரதம விருந்தினர், நூலகர் மற்றும் பொறுப்பதிகாரி தலைமையில் வெளியிடப்பட்டதுடன் , வாசிப்பு மாத போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும், பிரதேச சபையின் பதிவில் இயங்கிவருகின்ற சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியமும் வழங்கப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதம் 2024 பூநகரி பொது நூலகம்

பூநகரி பிரதேச சபையின் பூநகரி பொது நூலகத்தினால் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு 28.10.2024 அன்று பூநகரி பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது வாசிப்பு மாத விழிப்புணர்வு பேரணியுடன் ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் எமது கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.ப.சத்தியராகவன் அவர்கள் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக பூநகரி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சி.ஆனந்தசிறி, யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு.செ.செரஞ்சன்,பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு.ச.லதீஸ்குமார்,பூநகரி நல்லூர் மகாவித்தியாலய அதிபர் திரு.இ.கலைச்செல்வன்,பூநகரி ஞானிமடம் அ.த.க.பாடசாலை அதிபர் திரு.செ.சிவசங்கர்,சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அ.சசிக்குமார். பூநகரி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.கா.நிருபா, திரு. பொன்.தில்லைநாதன் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர், திரு.கா.கார்த்திகேசு ஓய்வு நிலை உத்தியோகத்தர் கூட்டுறவு திணைக்களம் ஆகியோர் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,பூநகரி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

“இன்றைய உலகில் தகவல் சாதனங்களின் வருகை புத்தக வாசிப்பை பாதிக்கின்றது – பாதிக்கவில்லை” என்னும் தலைப்பில் பூநகரி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களால் பட்டிமன்றம் இடம்பெற்றது. அத்துடன் தேசிய வாசிப்பு மாத சிறப்பு மலர் பூங்கதிர் சஞ்சிகை இதழ் 10 சபையின் செயலாளர், பிரமத விருந்தினர், நூலகர் மற்றும் பொறுப்பதிகாரி தலைமையில் வெளியிடப்பட்டதுடன் ,தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் , பிரதேச சபையின் பதிவில் இயங்கிவருகின்ற சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியமும் வழங்கப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதம் 2024 பல்லவராயன்கட்டு பொது நூலகம்

எமது பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தின் வாசிப்பு மாத நிகழ்வு 21.10.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வேரவில் பிரதேச வைத்தியர் Dr Rusiru Punsawan Puwakovitage அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வில் பல்லவம் இதழ் 06 சஞ்சிகை  சபையின் செயலாளர், பிரமத விருந்தினர், நூலகர் மற்றும் பொறுப்பதிகாரி தலைமையில் வெளியிடும் இடம்பெற்றது. அத்துடன் பிரதேச சபையின் பதிவில் இயங்கிவருகின்ற சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியமும் வழங்கப்பட்டது.