பூநகரி பிரதேசசபை தனது 2025ம் ஆண்டின் மகுட வாக்கியமான “சொல்லிற்கு முன்னதாக செயல்” இன் கீழாக மக்களிற்கான நலப்பணிகளை ஆரம்பித்துள்ளது.
பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேச பாடசாலை மாணவர்கள் தமது புதிய ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கற்றல் உபகரண பொதிகளை முதல்கட்டமாக ஜெயபுரம் ,பல்லவராயன்கட்டு மற்றும் வேரவில்,கிராஞ்சி,பொன்னாவெளி.வலைப்பாடு மற்றும் பாலாவி பகுதிகளில் இன்று புதன்கிழமை விநியோகித்துள்ளது.கல்வி திணைக்களத்தினால் அடையாளங்காணப்பட்ட மாணவர்களிற்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழர் பொங்கலை முன்னிட்டு பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,கைவிடப்பட்ட முதியவர்கள்,விசேட தேவையுடையோர் என ஆறு வகைப்படுத்தலின் கீழ் சுமார் 1.8மில்லியன் ஒதுக்கீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சுய தொழில் முயற்சிக்கான உதவிகள் ஏனைய பிரிவுகளிலும் வழங்கப்படுவதுடன் அடுத்த கட்டமாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மேலுமொரு தொகுதியினருக்கான உதவி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.