தேசிய வாசிப்பு மாதம் 2024 பல்லவராயன்கட்டு பொது நூலகம்

எமது பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தின் வாசிப்பு மாத நிகழ்வு 21.10.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வேரவில் பிரதேச வைத்தியர் Dr Rusiru Punsawan Puwakovitage அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அத்துடன் நிகழ்வில் பல்லவம் இதழ் 06 சஞ்சிகை  சபையின் செயலாளர், பிரமத விருந்தினர், நூலகர் மற்றும் பொறுப்பதிகாரி தலைமையில் வெளியிடும் இடம்பெற்றது. அத்துடன் பிரதேச சபையின் பதிவில் இயங்கிவருகின்ற சனசமூக நிலையங்களுக்கான வருடாந்த மானியமும் வழங்கப்பட்டது.

   

Cleanup Srilanka!

உலக துப்பரவு தினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபையால் தூய்மைப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 2024.09.28 ஆம் திகதி துப்பரவு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதற்கமைய எமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கேரதீவு சங்குப்பிட்டி பகுதியில் 2024.09.28 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி துப்பரவுப் பணியில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இணைந்து உலக துப்பரவு தினத்தினை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கினர்.

   

சிறார்களிற்கு இலைக்கஞ்சி!

தேசிய வாசிப்பு மாதம் 2024 முன்னிட்டு பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தனால் இன்று முன்பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு விழிப்புணர்வும் பொழுது போக்கு நிகழ்வாக சிறுவர் காட்டூன் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இலைக்கஞ்சியின் பயன்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டதுடன் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

 

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – 2024

பூநகரி பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு பொதுநூலகம், பூநகரி பொதுநூலகம், இரணைதீவு பொதுநூலகம் ஆகியவற்றில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்த   04.09.2024 அன்று  சபையின் செயலாளர் தலைமையில் பல்லவராயன்கட்டு பொதுநூலகத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கான வினாடிவினா போட்டி இடம்பெற்றது.

கடந்த  04.09.2024 அன்று  சபையின் செயலாளர் தலைமையில் பூநகரி பொதுநூலகத்தில் தரம் 01,02 மாணவர்களுக்கான சொல்லாக்கப் போட்டி மற்றும் கட்டுரை கவிதைப் போட்டியும் இடம்பெற்றது.

கடந்த  07.09.2024 அன்று  சபையின் செயலாளர் தலைமையில் பூநகரி பொதுநூலகத்தில் தரம் 06,07 மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி , தரம் 08,09 மாணவர்களுக்கான விளக்கக்காட்சிப் போட்டி மற்றும் தரம் 03, 04 மாணவர்களுக்கான சித்திரப் போட்டி, தட்டச்சுப்போட்டி (Typing )இடம்பெற்றது.

 

கட்டட அனுமதியை பெற்று கொள்வது எப்படி?

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் ஊடாக அந்த எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், ஆரோக்கியம், வசதிகள் மற்றும் நலனோம்பல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டரீதியான அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படுகின்ற நிர்மாண அனுமதிப்பத்திரத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்கும்போது ஆரோக்கியம், சுகாதாரம், மற்றும் நலனோம்பல் வசதிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
✔ பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற முறையில் பிரதேச சபையின் உரிய முறையான அனுமதியினைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அமைப்பது இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிதேசசபை கட்டளை சட்டத்தின் உப பிரிவு 47 இன் கீழ் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும்
👉கட்டட / நிர்மாண அனுமதியினை பெற்று கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1️⃣.விண்ணப்பதாரியின் கோரிக்கை கடிதம் & பூர்த்தி செய்யப்படட விண்ணப்ப படிவம் ( விண்ணப்ப படிவத்தினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் வேண்டும் அல்லது முன் அலுலக கருமபீடத்தில் பெற்று கொள்ள வேண்டும் )
2️⃣காணி உறுதி பிரதி (உண்மை பிரதி உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
3️⃣காணியின் வரலாற்றுதாள் ( தோம்பு 30 வருடங்கள்)
உண்மை பிரதி உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பித்தல் வேண்டும். தோம்பு தொலைந்ததிருப்பின் தொலைந்தமை தொடர்பாக காணி பதிவாளரால் வழங்கப்பட்ட கடிதம்.
4️⃣சபையினால் அங்கீகரிகப்பட்ட பட வரைஞர் ஒருவரால் வரையப்படட கட்டட வரைபடம்.
6️⃣ஆதன நில அளவை படபிரதி ( உண்மை பிரதி உறுதிப்படுத்தலுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
8️⃣விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை பிரதி.
9️⃣ஆதன உரிமையாளர் இல்லாது வேறு நபரினால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படுமாயின் அற்றோனிக் தத்துவம் பிரதி
1️⃣0️⃣ ஆதன விஸ்தீரணத்தின் அளவுகளில் வேறுபாடுகள் (சட்ட தரணிகள் மூலம் உறுத்திப்படுத்தப்படல் வேண்டும்.
1️⃣1️⃣ வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி ( தேவைப்படின்)
1️⃣2️⃣ வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதி (தேவைப்படின்)
1️⃣5️⃣நிலம் அரசுக்கு சொந்தமாக இருந்தால் பிரதேச செயலகத்தில் இருந்து குத்தகை ஒப்பந்தம் பெறப்பட வேண்டும்.
1️⃣6️⃣தனியார் அல்லாத கட்டிடத்தில் கட் டட அனுமதி வழங்கப்பட வேண்டுமானால் வேண்டுமானால் பிரதேச செயலகத்தின் அனுமதி.
❎உள்ளூராட்சி மன்றத்தில் கட்டட அனுமதியை பெற்று கொள்ளும் செயன்முறை
❇முன்அலுவலகத்தில் அல்லது இணையத்தளத்தில் கட்டிட விண்ணப்ப படிவத்தை பெற்று, பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான உதவி ஆவணங்களுடன் சமர்ப்பித்தல்.
❇பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் வருமானப்பரிசோதகர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடமிருந்து கள ஆய்வு அறிக்கைகள் பெறப்படுதல், தேவை ஏற்படின் தொடர்புபட்ட திணைக்கள அனுமதியினை பெற்றுக்கொள்ளல்.
❇திட்டமிடல் குழுக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு பொருத்தமான திணைக்கள மற்றும் உள்ளுராட்சி அலுவலர்களின் பங்குபற்றுலுடன் கட்டிட விண்ணப்படிவம் பரீசிலிக்கப்பட்டு ஏறறுக்கொள்ளப்படுதல் அல்லது மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுதல்.
❇கட்டிட அனுமதிப்பத்திரத்தினை வழங்குதல்.
⚫விண்ணப்பப்பத்திர கட்டணம் 500.00
⚫செயன்முறைக் கட்டணம் : விஸ்தீரம், கட்டிடத்தின் தன்மையின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.

பொதுச் சந்தை குத்தகைக்கு வழங்குவதற்கான பகிரங்க ஏலம் கோரல் அறிவித்தல் – 2024

பூநகரி பிரதேசசபை எல்லைப்பரப்பிற்குட்பட்ட 19 ம் கட்டை பொதுச் சந்தை 09.08.2024 – தொடக்கம் 31.12.2024 வரையான காலப்பகுதிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு பகிரங்க ஏலம் கோரல் பொருத்தமான நபர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
ஏல கேள்விப்பத்திரம் வழங்கப்படும் திகதி :- 05.08.2024 – 08.08.2024 (பி.ப 1.30 மணி வரை)
ஏல கேள்வி ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி :- 08.08.2024
ஏலம் நடைபெறும் திகதி :- 08.08.2024
ஏலம் நடைபெறும் நேரம் :- பி.ப 2.00 மனி
ஏலம் நடைபெறும் இடம் :- பூநகரி பிரதேச சபை, தலைமை அலுவலகம்.
பகிரங்க ஏலத்தில் பங்குபற்ற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை செய்து பிரதேச சபையில் வழங்குவதன் மூலம் தங்களது வரவை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
இவ்விடயம் தொடர்பாக வாடியடியில் உள்ள பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் தாங்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ நிர்ணயிக்கப்பட்ட இறுதித் தொகைகளுக்குரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்பு இலக்கம் :- 0212282666

உலக சுற்றாடல் தினம்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு எமது பிரதேச சபையால் துப்பரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் முதற்கட்டமாக யூன் 03 ம் திகதி எமது பிரதேச சபை தலைமை அலுவலக, உப அலுவலக வளாகங்கள் சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களால் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் துப்பரவுப் பணியில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், சனசமூக நிலையத்தினர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்வாக யூன் 04 ம் திகதி பொதுச் சந்தைகளிலும் சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த சுற்றுலா மையங்களிலும் பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் அகற்றுதல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வாக யூன் 05 ம் திகதி  முழங்காவில் பொதுச் சந்தை வளாகத்திலும்; பல்லவராயன்கட்டு உப அலுவலக வளாகத்திலும் மரங்கள் நடப்பட்டன.

பூநகரி அபிவிருத்தியடைந்த பிரதேசமாக அறிவிப்பு!

பூநகரி பிரதேசசபை தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இரணைதீவு உப அலுவலகத்திற்குட்பட்ட முழங்காவில் வட்டாரம் மற்றும் வாடியடி உப அலுவலகத்;திற்குட்பட்ட ஞானிமடம் வட்டாரம் என்பவையே அபிவிருத்தியடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் கடந்த ஜீன் 14ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பிலேயே  பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பூநகர் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா – 2024

பூநகரி பிரதேச சபையின் சபைக்குட்பட்ட முன்பள்ளியான பூநகர் முன்பள்ளியின் மழலைகளின் விளையாட்டு மற்றும் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு கடந்த 19.06.2024 அன்று சபையின் செயலாளர் திரு இரத்தினம் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.